Tuesday, November 20, 2018


திறப்பு விழா 

திரவியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காமலாபுரம் 


         மதுரை – பழனி சாலையில் இயற்கை எழில் சூழ்ந்த காமலாபுரத்தில் திரவியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இன்று கம்பீரமாகக் காட்சியளிக்கிறது என்றால், அதற்குப் பின்னால் அமலவைக் கன்னியர்களின் இடைவிடா கடின உழைப்பும், அர்ப்பணமும் இருக்கிறது. அமலவை அதிபர் ஏர்னஸ்டீன் அவர்கள் முயற்சியுடன் பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்களின் ஒப்புதலுடன் 1977 ஜூன் 20-இல் காமலாபுரத்தில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. பிற்பட்ட மக்களின் நலன் நாடும் பேராயர் திரவியம் அவர்களின் பெயர் பள்ளிக்குச் சூட்டப்பட்டது. தொடக்கத்தில் 134 மாணவியர் கல்வி பயின்றனர். பள்ளியானது நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து இன்று 1188 மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வதற்கு வசதியாக கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா 20.11.2018 அன்று மதுரை மாநிலத் தலைவி சகோதரி ஞான சௌந்தரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பஞ்சம்பட்டி வட்டார அதிபர்தந்தை சேசுராஜ் அவர்கள் கட்டிடத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தினார். அதன்பின்பு குத்துவிளக்கு ஏற்றி சிறிய வழிபாடு நடத்தப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் அருட்சகோதரி அமலி A.S. அவர்கள் இக்கட்டிடம் நன்முறையில் அமைய அருளுதவியும் பொருளுதவியும் செய்த மாநிலத் தலைவிக்கும், பள்ளியின் தாளாளர் சகோதரி  தைனஸ் மேரி அவர்களுக்கும் பொறியாளர் திரு. பிரபாகரன் அவர்களுக்கும் உடன் உழைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறி பொன்னாடை அணிவித்து பெருமைப்படுத்தினார். இறுதியில் மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment